< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் பலி

File image


உலக செய்திகள்

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் பலி

தினத்தந்தி
|
20 Sept 2024 4:47 PM IST

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள லதா தெஹ்சில் மிஷ்தா கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது.

மேலும் செய்திகள்