< Back
உலக செய்திகள்
500 கிலோ பூசணிக்காய்... படகாக பயன்படுத்தி 70 கி.மீ. பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்
உலக செய்திகள்

500 கிலோ பூசணிக்காய்... படகாக பயன்படுத்தி 70 கி.மீ. பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்

தினத்தந்தி
|
5 Nov 2024 6:05 AM IST

ஒரு பெரிய பியானோ அல்லது பெரிய ஒட்டகம் அளவுக்கு உள்ள இந்த பூசணிக்காய்க்கு பங்கி லேப்ஸ்டர் என கேரி பெயரிட்டார்.

கொலம்பியா,

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல வருட கனவு. அதனை செய்து முடித்திருக்கிறார்.

இதற்காக, கடந்த ஜூலை மத்தியில் வளர்க்கப்பட்ட பூசணிக்காய், அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. 429.26 செ.மீ. சுற்றவுடன் 555.2 கிலோ எடை கொண்டுள்ளது. ஒரு பெரிய பியானோ அல்லது பெரிய ஒட்டகம் அளவுக்கு உள்ள இந்த பூசணிக்காய்க்கு பங்கி லேப்ஸ்டர் என கேரி பெயரிட்டார்.

இதனை கொலம்பியா ஆற்றில் படகு போன்று பயன்படுத்தி, 73.5 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து உள்ளார். இதற்காக ஏறக்குறைய 26 மணிநேரம் செலவிட்டு உள்ளார். தொடக்கத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. அலைகளும் அவரை அச்சுறுத்தியுள்ளன. எனினும், துணிச்சலாக படகை செலுத்தி பாதுகாப்பான இடத்தில் இறங்கியுள்ளார். இந்த பயணத்தில் அவர் தூங்காமல் சென்றுள்ளார். அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்