< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி; 15 பேர் காயம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி; 15 பேர் காயம்

தினத்தந்தி
|
3 Nov 2024 7:39 AM IST

பாகிஸ்தானில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர்.

ஜகோபாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். இதுதவிர, 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதத்தில், ஜகோபாபாத் பகுதியில், திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று, விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்தனர். அந்த பஸ்சின் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.

மேலும் செய்திகள்