< Back
உலக செய்திகள்
ஈரான் நாட்டில் கடுமையான நிலநடுக்கம்... 4 பேர் பலி - 120 பேர் படுகாயம்
உலக செய்திகள்

ஈரான் நாட்டில் கடுமையான நிலநடுக்கம்... 4 பேர் பலி - 120 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
18 Jun 2024 10:43 PM IST

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 1.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுடன்,120 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2003-ல் ஈரானின் தென்கிழக்கு நகரமான பாமில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 31,000 க்கும் அதிகமான மக்களை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்