< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி
|2 July 2024 1:45 AM IST
கீழே விழுவதற்கு முன்பு அங்குள்ள மின்னழுத்த கம்பி மீது விமானம் உரசியதாக கூறப்படுகிறது.
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கொலெஜியன் நகரில் உள்ள நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி பலியாகினர்.
இதற்கிடையே கீழே விழுவதற்கு முன்பு அங்குள்ள மின்னழுத்த கம்பி மீது விமானம் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.