< Back
உலக செய்திகள்
மலேசியாவில் மோசமான வெள்ளம்; 3 பேர் பலி
உலக செய்திகள்

மலேசியாவில் மோசமான வெள்ளம்; 3 பேர் பலி

தினத்தந்தி
|
29 Nov 2024 3:58 PM IST

மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

7 மாநிலங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 84,547 பேர் 488 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலமான கெலந்தனில் 56,029 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அண்டை நாடான டெரெங்கானுவில் 21,264 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்