< Back
உலக செய்திகள்
மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 200 அகதிகள் கைது
உலக செய்திகள்

மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 200 அகதிகள் கைது

தினத்தந்தி
|
4 Jan 2025 11:25 PM IST

மலேசியாவின் கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

கோலாலம்பூர்,

மலேசியாவுக்கு அண்டை நாடுகளான மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக நுழைகின்றனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதியில் மலேசியா அரசாங்கம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் அங்குள்ள கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அகதிகளை ஏற்றிக் கொண்டு 2 படகுகள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து படகில் இருந்த 200 அகதிகளையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்