< Back
உலக செய்திகள்
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது

தினத்தந்தி
|
28 Oct 2024 2:55 AM IST

சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ரியாத்,

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது.

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்ட விரோதமாக குடியேறியதாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்