< Back
உலக செய்திகள்
கேமரூனில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி

File image

உலக செய்திகள்

கேமரூனில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி

தினத்தந்தி
|
29 Nov 2024 1:22 PM IST

கேமரூனில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாவுண்டே,

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் லோகோநெட்-சாரி பகுதியில் உள்ள டாராக் தீவில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்தது, இந்த விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை தேடி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிக சுமை, தவறான செயல்பாடுகள் மற்றும் கடுமையான வானிலை ஆகியவற்றால் அடிக்கடி படகு விபத்துகள் இப்பகுதியில் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்