< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 20 பேர் பலி
உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 20 பேர் பலி

தினத்தந்தி
|
24 Oct 2024 3:54 PM IST

லெபனானில் பல்வேறு இடங்களில் உள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுத தளங்களை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

பெய்ரூட்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் 27-ம் தேதி கொல்லப்பட்டார்.

இந்நிலையில், லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஹிஸ்புல்லா அமைப்பினரை அழித்ததாகவும், ஹிஸ்புல்லாவின் 160 க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கியதாகவும் தெரிவித்து உள்ளது. லெபனானில் பல்வேறு இடங்களில் உள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுத தளங்களை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுத கிடங்கை கண்டுபிடித்ததாகவும், அங்கு ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கி தகர்ப்பு ஆயுதங்கள், மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்