< Back
உலக செய்திகள்
ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி

கோப்புப்படம் 

உலக செய்திகள்

ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி

தினத்தந்தி
|
27 Jun 2024 9:29 PM GMT

ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்