< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனா: ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் மாயம்
|5 Dec 2024 12:37 PM IST
ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் மாயமான தொழிலாளர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பீஜிங்,
சீனாவின் ஷென்சென் நகரின் பாவோன் மாவட்டத்தில் உள்ள ஷென்சென்-ஜியாங்மென் ரெயில்வேயின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான தளத்தில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென நிலம் இடிந்து விழுந்தது.
இதில் அங்கு பணிபுரிந்து வந்த 13 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் மாயாமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த இடிபாட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தை சுற்றி தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.