< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியா: தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 11 பேர் பலி, 19 பேர் மாயம்
|8 July 2024 12:31 PM IST
இந்தோனேசியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜகார்தா,
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. கனிமவளம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தோனேசியாவில் ஏராளமான சட்ட விரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள சுலவேசி தீவில் கோரோண்டாலோ பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இந்த திடீர் நிலச்சரிவில் சிக்கினர். தற்போது வரை 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 19 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.