< Back
வானிலை
வானிலை
சென்னையில் பரவலாக மழை
|30 Nov 2024 1:10 AM IST
பெஞ்சல் புயல் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை கரையக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் நேற்று விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் பல இடங்களிலும் திடீரென கனமழை பெய்தது. இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. பட்டினப்பாக்கம், அடையாறும், திருவான்மியூர், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை நந்தனம் என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.