தமிழகத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
|தமிழகத்தில் காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போதுதான் தென் இந்திய பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன்படி தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.