< Back
வானிலை

கோப்புப்படம்
வானிலை
பிற்பகல் 2 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

13 Jan 2025 11:21 AM IST
பிற்பகல் 2 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கிழக்கு இலங்கை கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது.
இந்நிலையில், பிற்பகல் 2 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.