காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
|தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (புதன்கிழமை) வலுஇழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
ராணிப்பேட்டை,
வேலூர்,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
அரியலூர்,
பெரம்பலூர்,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
திருச்சி,
புதுக்கோட்டை,
ஈரோடு,
நாமக்கல்,
கரூர்,
ராமநாதபுரம்,
நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.