< Back
வானிலை
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

கோப்புப்படம்

வானிலை

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தினத்தந்தி
|
6 Nov 2024 1:55 PM IST

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 மாவட்டங்களில் இன்று கனமழை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ., 6ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11 மாவட்டங்களில் நாளை கனமழை

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ., 7ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் கனமழை

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவ., 8ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 9-ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 10-ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை

நெல்லை, குமரி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 11-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 12-ம் தேதி கடலூர், நாகை, தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியசை ஒட்டியும் இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்