< Back
வானிலை

வானிலை
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்.. தத்தளிக்கும் சென்னை: புகைப்பட தொகுப்பு

15 Oct 2024 4:58 PM IST
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள்:









