< Back
வானிலை
பாலத்தை சூழ்ந்த வெள்ளம்..  விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
வானிலை

பாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2024 1:52 PM IST

பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை:

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தில் (பாலம் எண் 452) அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருக்கோவிலூர்-தண்டரை இடையே உள்ள பாலத்திலும் (பாலம் எண் 84) வெள்ளம் அபாய அளவை தாண்டியது.

இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்:

சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

சென்னை- மதுரை வந்தே தேஜஸ் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்

புதுச்சேரி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்

காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ்

நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரெயில்

விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரெயில்

நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது.

ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ், விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பிவிடப்பட்டது.

கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக இயக்கப்பட்டது.

திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்துடன் நிறுத்தப்படுகிறது.

நெல்லை-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக எழும்பூருக்கு வந்து சேரும்.

தூத்துக்குடி-சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு, காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக எழும்பூருக்கு வந்து சேரும்.

ராமேஸ்வர-அயோத்யா கண்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடி, அரக்கோணம், குண்டூர் வழியாக செல்லும். சென்னை எழும்பூருக்கு இந்த ரெயில் வராது. அதற்கு பதிலாக சென்னை பெரம்பூரில் நின்று செல்லும்.

இன்று மதியம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தில் வெள்ளத்தின் வேகம் குறைந்த நிலையில், ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்