< Back
வானிலை
வானிலை
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
|30 Nov 2024 10:53 PM IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.