< Back
வானிலை
3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வானிலை

3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
26 Nov 2024 9:16 PM IST

3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணிநேரத்திற்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்கள், காரைக்காலில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அடுத்த 24 மணிநேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்