< Back
வானிலை
வானிலை
விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
|19 Oct 2024 9:03 AM IST
விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடத சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.