< Back
வானிலை
24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வானிலை

24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
29 Oct 2024 7:34 PM IST

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சூழலில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்