< Back
வானிலை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
வானிலை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தினத்தந்தி
|
29 Oct 2024 6:16 PM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.

சென்னை,

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சூழலில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை, கடந்த சில தினங்களாக பகலில் வெயில் அதிகரித்தும், மாலையில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இந்த சூழலில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.

அண்ணாசாலை, ராயப்பேட்டை, வேப்பேரி, எழும்பூர், சென்ட்ரல், வடபழனி, ஆலந்தூர், வேளச்சேரி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள், மிதமான மழைக்கு மத்தியில் தீபாவளியை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்

மேலும் செய்திகள்