< Back
வானிலை
வானிலை
தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு பகுதி
|25 Dec 2024 5:45 AM IST
சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதேபோல, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
வட தமிழகத்தை நெருங்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 30-ந் தேதி வரையில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதனான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.