< Back
வானிலை
கனமழை ; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வானிலை

கனமழை ; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினத்தந்தி
|
27 Nov 2024 7:26 PM IST

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்