எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
|எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
கடலூர்,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.
இந்த பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, கடலூரில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடலூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பெஞ்சல் புயலால் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.