< Back
வானிலை
புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் - பாலச்சந்திரன் பேட்டி
வானிலை

புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் - பாலச்சந்திரன் பேட்டி

தினத்தந்தி
|
30 Nov 2024 3:48 PM IST

கரைக்கு அருகே வரும் போது புயலின் நகர்வு வேகம் குறையும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புயல் உள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகில் இன்று மாலை புயல் கரையை கடக்கிறது. கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம். மயிலாடுதுறை முதல் திருவள்ளூர் வரை 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அதி கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், வேலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 9.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் நாளையும் கனமழை பெய்யும். என்றார்.

மேலும் செய்திகள்