< Back
வானிலை
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

கோப்புப்படம்

வானிலை

இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

தினத்தந்தி
|
14 Oct 2024 5:52 PM IST

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை,

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 7 மணி வரை கீழ்கண்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

* திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது

மேலும் செய்திகள்