< Back
வானிலை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..?  வெளியான முக்கிய தகவல்

Image Courtacy: ANI

வானிலை

எந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..? வெளியான முக்கிய தகவல்

தினத்தந்தி
|
1 Dec 2024 8:40 AM IST

புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் மேற்கு-தென் மேற்கில் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே பெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

ரெட் அலர்ட் மாவட்டங்கள் (அதி கனமழை)

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

கடலூர்

பெரம்பலூர்

புதுச்சேரி

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

வேலூர்

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

சேலம்

நாமக்கல்

திருச்சி

அரியலூர்

புதுக்கோட்டை

மயிலாடுதுறை

மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் (கன மழை)

சென்னை

திருவள்ளூர்

நாகப்பட்டினம்

திண்டுக்கல்

ஈரோடு

கிருஷ்ணகிரி

தருமபுரி

காரைக்கால்

நாளை (2-ந் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்