< Back
வானிலை
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வானிலை

கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினத்தந்தி
|
25 Nov 2024 12:49 PM IST

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்றும் சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீ. துரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உள்ளது என்றும் வடமேற்காக தமிழ்நாடு - இலங்கையை நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, கரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்