< Back
வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை
வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை

தினத்தந்தி
|
12 Dec 2024 5:45 AM IST

4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் , சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது . சென்னை எழும்பூர், சென்டிரல், மீனம்பாக்கம், கிண்டி , கோடம்பாக்கம் , நுங்கம்பாக்கம் , அண்ணா சாலை , , மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்