< Back
வானிலை
வானிலை
தமிழகத்தில் 14-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
|8 Nov 2024 8:49 AM IST
தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.