< Back
வானிலை
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
1 Nov 2024 3:34 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, குமரி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்