< Back
வானிலை
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வானிலை

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தினத்தந்தி
|
14 Dec 2024 7:26 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து செல்லும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்