< Back
வானிலை
வானிலை
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
|24 Nov 2024 4:35 PM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.