< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்
|28 Oct 2024 3:20 AM IST
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனந்த் விஹார், விவேக் விஹார், ஜஹங்கீர்பூர், சோனியா விஹார் உள்பட பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் மூச்சுவிடுவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி நெருங்கி வரும் தற்போதே டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தீபாவளியன்று டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளபோது தடையை மீறி சிலர் பட்டாசு வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது