< Back
வானிலை
கரையைக் கடந்தது டானா புயல்: ஒடிசாவின்  பல்வேறு பகுதிகளில் கனமழை
வானிலை

கரையைக் கடந்தது டானா புயல்: ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை

தினத்தந்தி
|
25 Oct 2024 6:48 AM IST

தீவிர புயலாக கரையைக் கடந்த 'டானா' இன்று பிற்பகலில் புயலாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. நள்ளிரவு 12.20 மணியில் இருந்து அதிகாலை வரை சுமார் 5 மணி நேரம் புயல் கரையைக் கடந்தது.தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகரும் புயல், சாகர் தீவில் இருந்து 150 கி.மீ. தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் புயலாக வலுவிழக்கும்.

முன்னதாக, புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்தது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் சரிந்து விழுந்தன. புயல் பாதிப்பு இருக்கும் என்பதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா உதவி எண்கள்: பாலாசோர்: 06782-262286 / 261077 மயூர்பஞ்ச்: 06792-252759 / 252941 பத்ரக்: 06784-251881 ஜஜ்பூர்: 06728-222648 கேந்திரப்பா: 06727-232803 கியோன்ஜார்: 06766-255437 ஜகத்சிங்பூர்: 06724-220368 கட்டாக்: 0671-2507842 தேன்கானால்: 06762-226507 / 221376 புரி: 06752-223237 BMC (BBSR) கட்டணமில்லா சேவை எண்-1929 அவசர உதவி என்: 112 ஆகிய புயல் பாதிப்பு தொடர்பான உதவி எண்களை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்