< Back
வானிலை
டானா புயல்: மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி
வானிலை

டானா புயல்: மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி

தினத்தந்தி
|
26 Oct 2024 12:09 AM IST

டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொல்கத்தா,

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 23ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.

இந்நிலையில், டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, புயலால் மேற்கு வங்காளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்