< Back
வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை
வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை

தினத்தந்தி
|
13 Nov 2024 1:49 AM IST

சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டிய நிலையில், இன்று 2வது நாளாக மழை நீடிக்கிறது.

சென்னை எழும்பூர், சென் ட்டிரல், கோயம்பேடு, மதுரவாயல், புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், குரோம்பேட்டை,கோவிலம்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்