< Back
வானிலை
தமிழகத்தில் இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
6 Dec 2024 6:47 AM IST

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது அது சுமத்ரா தீவு அருகே சுழற்சியாக உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகவும் வலுப் பெறக்கூடும் என்றும், வருகிற 12 (வியாழக்கிழமை) அல்லது 13 (வெள்ளிக்கிழமை) -ந்தேதிகளில் சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடப்பதற்கான சூழல் அதிகமாக உள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்