< Back
வானிலை
27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

வானிலை

27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
1 Dec 2024 4:46 PM IST

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நேற்று (30-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு 10.30 - 11.30 மணி அளவில், கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்