< Back
வானிலை
வானிலை
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|11 Nov 2024 10:30 AM IST
தென்மேற்கு வங்கக்கடல் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.