< Back
வானிலை
பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

File image

வானிலை

பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
7 Dec 2024 10:42 AM IST

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று (டிசம்பர் 7) முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 11,12-ஆகிய தேதிகளில் கடலூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்