< Back
வானிலை
வானிலை
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|17 Dec 2024 7:49 AM IST
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது. இது அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, வட கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழத்தில் இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.