< Back
வானிலை
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

வானிலை

இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
13 Oct 2024 8:20 PM IST

இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, சேலம், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்