< Back
வானிலை
இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

வானிலை

இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
16 Oct 2024 5:49 PM IST

சென்னை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழைபெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்