< Back
வானிலை
மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை

மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
27 Dec 2024 10:39 AM IST

திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 3 நாட்களில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்