< Back
வானிலை
நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
28 Nov 2024 10:57 PM IST

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடையாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்